2026 உலகக் கோப்பை குலுக்கல்: 48 அணிகளுக்கான குழுக்கள் அறிவிப்பு

top-news

செய்தி-வெற்றி மைந்தன்

வாஷிங்டன், அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் 2026 ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறவிருக்கும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் குழு நிலை குலுக்கல் டிசம்பர் 5 அன்று வாஷிங்டனில் நடைபெற்றது. முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் 12 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

குழு A: மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, யூரோப்பிய பிளேஆஃப் D வெற்றியாளர். குழு B: கனடா, யூரோப்பிய பிளேஆஃப் A வெற்றியாளர், கத்தார், சுவிட்சர்லாந்து. குழு C: பிரேசில், மொராக்கோ, ஹைதி, ஸ்காட்லாந்து. குழு D: அமெரிக்கா, பராகுவே, ஆஸ்திரேலியா, யூரோப்பிய பிளேஆஃப் C வெற்றியாளர். குழு E: ஜெர்மனி, குராசாவோ, ஐவரி கோஸ்ட், ஈக்வடார். குழு F: நெதர்லாந்து, ஜப்பான், பிளேஆஃப் B வெற்றியாளர், துனிசியா. குழு G: பெல்ஜியம், எகிப்து, ஈரான், நியூசிலாந்து. குழு H: ஸ்பெயின், கேப் வெர்டே, சவுதி அரேபியா, உருகுவே. குழு I: பிரான்ஸ், செனகல், நார்வே, இன்டர்கான்டினென்டல் பிளேஆஃப் 2 வெற்றியாளர். குழு J: அர்ஜென்டினா, அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான். குழு K: போர்ச்சுகல், இன்டர்கான்டினென்டல் பிளேஆஃப் 1 வெற்றியாளர், உஸ்பெகிஸ்தான், கொலம்பியா. குழு L: இங்கிலாந்து, குரோஷியா, கானா, பனாமா.

முழு அட்டவணை டிசம்பர் 6 அன்று வெளியிடப்படும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *