RTS புக்கிட் சாகார் – KTMB கொமுட்டர் இடையே RM60 மில்லியன் நேரடி இணைப்பு
- Surendran Sumdraraj
- 18 Aug, 2026
ஜொகூர் பாரு, ஆக. 18-
பொதுப் போக்குவரத்து ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், பயணிகள் போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும், RTS Link புக்கிட் சாகார் நிலையத்தையும் KTMB கொமுட்டர் சேவையையும் இணைக்கும் நேரடி இணைப்பு பாலம் RM60 மில்லியன் செலவில் அமைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
இந்த கூடுதல் திட்டத்திற்கு பொருளாதார அமைச்சு ஒப்புதல் வழங்கியுள்ளதுடன், போக்குவரத்து அமைச்சு விரைவில் இதனை செயல்படுத்தும் என அவர் மேலும் சொன்னார்.
இந்த இணைப்பு அமைக்கப்பட்டதும், KTMB கொமுட்டர் சேவையைப் பயன்படுத்தி புக்கிட் சாகார் வரும் பயணிகள், தற்போதுள்ள ஜேபி செண்ட்ரல் வழியாக நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய அவசியமின்றி, நேரடியாக RTS புக்கிட் சாகார் நிலையத்துக்குச் செல்ல முடியும்.
“திட்டம் நிறைவடைந்ததும், KTMB கொமுட்டர் நிலையத்தில் இறங்கும் பயணிகள் நேரடியாக RTS புக்கிட் சாகார் நிலையத்துக்குத் தங்களது பயணத்தைத் தொடர முடியும். இது ஏராளமான பயணிகளுக்கு வசதியாக இருக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



