சிலிக்கான் தீவு திட்டம்: துறைமுக எல்லை மாற்றம், ஆய்வில் கட்டண விலக்கு கோரிக்கை

top-news

கோலாலம்பூர், அக். 7: பினாங்கு மாநிலத்தின் சிலிக்கான் தீவு திட்டத்தை செயல்படுத்துவதற்காகத் துறைமுக எல்லை மாற்றம் தொடர்பான அரசிதழ் அறிவிப்பை ரத்து செய்வது மற்றும் துறைமுகக் கட்டணங்களில் விலக்கு வழங்குவது தொடர்பாக பினாங்கு மாநில அரசு முன்வைத்துள்ள விண்ணப்பத்தை போக்குவரத்து அமைச்சு ஆய்வு செய்து வருகிறது.

துறைமுக எல்லைகளை மாற்றுவது 1952-ஆம் ஆண்டு வணிகக் கப்பல் போக்குவரத்து சட்டத்தின் துணைப்பிரிவு 6(3)-இன் கீழ் போக்குவரத்து அமைச்சரின் அதிகார வரம்பிற்குட்பட்ட விவகாரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், துறைமுக எல்லைகளை மாற்றுவது அல்லது மறுநிர்ணயம் செய்வது தொடர்பான எந்தவொரு பரிந்துரையும் நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின் அடிப்படையில் விரிவாக ஆராயப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

குறிப்பாக, கப்பல் போக்குவரத்து பாதுகாப்பு, துறைமுக நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள், சம்பந்தப்பட்ட தரப்பினரின் நலன்கள் உள்ளிட்ட அம்சங்கள் அனைத்தும் இந்த ஆய்வில் கருத்தில் கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *