SST மற்றும் GST வரி முறைகளை இணைப்பது குறித்து ஆய்வு செய்ய அரசாங்கம் தயார்
- Surendran Sumdraraj
- 18 Aug, 2026
புத்ராஜெயா, ஆக. 18-
நாட்டின் வரி முறையை மேலும் முன்னேற்றமானதாகவும் சிறந்ததாகவும் மாற்றும் நோக்கில், விற்பனை மற்றும் சேவை வரி (SST) மற்றும் பொருட்கள் மற்றும் சேவை வரி (GST) ஆகியவற்றின் சில அம்சங்களை இணைப்பது குறித்து ஆய்வு செய்ய அரசாங்கம் திறந்த மனதுடன் இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போதைய வரி முறையின் அடிப்படையாக SST தொடர்ந்து நிலைத்திருக்கும் என அவர் கூறினார். அதேவேளை, சிறந்த வரி முறையை உருவாக்குவதற்கு GST-யின் பொருத்தமான சில அம்சங்களை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பையும் அரசாங்கம் நிராகரிக்கவில்லை என்றார்.
GST குறித்து மட்டும் பேசுவது தொடர்பில் தமக்கு சில கவலைகள் இருப்பதாக அன்வார் தெரிவித்தார். குறிப்பாக, இதுவரை வரி செலுத்தாதவர்களும் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதால், தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சுமையை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



