முல்லைப் பெரியாறு பராமரிப்பு பணிகளுக்கு கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை: தமிழக அரசு குற்றச்சாட்டு
- Surendran Sumdraraj
- 13 Aug, 2026
புதுடெல்லி, ஆக. 13-
முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்தும் மற்றும் பராமரிக்கும் பணிகளுக்குக் கேரள அரசு தொடர்ந்து தடைகளை ஏற்படுத்தி வருவதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளது. அணை தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நிலை அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு மற்றும் பேபி அணையை பலப்படுத்தும் பணிகளுக்காக இயந்திரங்களை எடுத்துச் செல்ல வசதியாக, கேரள வனப்பகுதியில் சில மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
எனினும், அந்த மரங்களை வெட்டுவதற்கு கேரள அரசு இதுவரை அனுமதி வழங்காமல் காலதாமதம் செய்து வருவதாக தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், அணையின் பராமரிப்புப் பணிகளுக்காக கண்காணிப்புக் குழு வழங்கிய வழிகாட்டுதல்களின்படி பூச்சுப் பணிகளை மேற்கொள்ளவும் கேரளா தொடர்ந்து தடைகளை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



