நாட்டில் டெங்கி பாதிப்பு 66 சதவீதம் அதிகரிப்பு – 65,979 வழக்குகள் பதிவு
- Surendran Sumdraraj
- 09 Sep, 2026
புத்ராஜெயா, செப். 9 –
நாட்டில் டெங்கி காய்ச்சல் பாதிப்பு கவலைக்கிடமாக அதிகரித்துள்ள நிலையில், இந்த ஆண்டின் 35-ஆவது தொற்றுநோயியல் வாரம் வரை மொத்தம் 65,979 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 39,616 டெங்கு வழக்குகள் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு பாதிப்பு எண்ணிக்கை 66 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தத் தகவல் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதாக ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டத்தோ ஸ்ரீ பாமி பட்சில் தெரிவித்தார்.
டெங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், டெங்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.
நாட்டின் பல பகுதிகளில் டெங்கு பரவல் அதிகரித்து வருவது தொடர்பாக அமைச்சரவைக்கு சுகாதார நிலவரம் விளக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொசு பெருக்கத்துக்கு வழிவகுக்கும் தேங்கிய நீர், சுத்தமற்ற சுற்றுப்புறம் மற்றும் மழைக்கால சூழ்நிலைகள் டெங்கி பரவலை அதிகரிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன.
இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கிய நீரை அகற்றுதல், கொசு இனப்பெருக்க இடங்களை அழித்தல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுதல் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

