மலேசியாவில் இணைய மோசடி வழக்குகள் 87 விழுக்காடு அதிகரிப்பு
- Surendran Sumdraraj
- 15 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 15 –
மலேசியாவில் கடந்த ஆண்டு பதிவான இணையவழி மோசடி (Online Scam) வழக்குகள் 87 சதவீதம் அதிகரித்து 66,204 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய காவல்துறைத் தலைவர் தான் ஸ்ரீ முகமது காலித் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
முந்தைய ஆண்டில் 35,368 வழக்குகள் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், இந்த திடீர் உயர்வு நாட்டில் இணையக் குற்றங்களின் அச்சுறுத்தல் மிகவும் தீவிரமடைந்து வருவதைக் காட்டுவதாக அவர் கூறினார்.
பல்வேறு அமலாக்க நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட போதிலும், இணைய மோசடி சம்பவங்கள் கவலைக்கிடமான அளவில் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்ததோடு, நிதி இழப்பும் பெருமளவில் உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு மட்டும் இணைய மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தமாக RM2.97 பில்லியன் இழப்பை சந்தித்துள்ளனர். இது 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் RM1.40 பில்லியன் அதிகமாகும் என அவர் மேலும் சொன்னார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

