ஜொகூரில் 773 மாணவர்கள் பகடிவதையால் பாதிப்பு!
- THINAGAREN SANGGAREN
- 22 Nov, 2026
நவம்பர் 22,
பள்ளி மாணவர்களிடையே நிலவும் பகடிவதைகளைத் தடுக்க அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனும் குற்றச்சட்டை ஜொகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Dr Muhammad Naqib Md Ghazali மறுத்தார். ஜொகூரில் உள்ள 165 பள்ளிகளில் உள்ள 773 மாணவர்கள் பகடிவதையால் பாதிக்கப்பட்டிருப்பதைக் கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து முந்தைய ஆண்டுகளை விடவும் இவ்வாண்டு ஜொகூர் பள்ளி மாணவர்களிடையிலான பகடிவதைக் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்
ஜொகூர் மாநிலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு 984 மாணவர்களும் 2024 ஆம் ஆண்டு 1080 மாணவர்களும் 2025 ஆம் ஆண்டு 327 மாணவர்களும் பகடிவதையால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சின் தரவுகளின்படி நாடு முழுவதும் கடந்த 2023 ஆம் ஆண்டு 6528 பகடிவதைச் சம்பவங்களும், 2024 ஆம் ஆண்டு 7681 பகடிவதைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு ஜொகூரில் மொத்தம் 327 பகடிவதைச் சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளதை ஜொகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Dr Muhammad Naqib Md Ghazali சுட்டிக்காட்டியதுடன் மாநிலம் முழுக்க மேற்கொள்ளப்படும் பகடிவதைத் தடுப்புக்கான நடவடிக்கைகள் மாணவர்களுக்குப் பயனளித்திருப்பதாக தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

