போதைப்பொருள் அடிமைகளை ‘ஏடிஎம்’ போல பயன்படுத்திய போலீசார்: கிளந்தான் காவல்துறை விசாரணை
- Surendran Sumdraraj
- 21 Jul, 2026
கோத்தா பாரு, ஜூலை 21-
மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தில் சில போலீஸ் அதிகாரிகள், போதைப்பொருள் அடிமைகளை மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக கிளந்தான் மாநில காவல்துறை தலைவர் டத்தோ முகமட் யூசோப் மாமட் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிடம் இருந்து கிடைத்த தகவலின்படி, களப்பணியில் ஈடுபடும் சில போலீசார், போதைப்பொருள் அடிமைகளைப் பிடித்த பின்னர், கைது செய்து காவல் நிலையத்தில் அடைக்காமல் விடுவிக்க வேண்டுமெனில் பணம் வழங்க வேண்டும் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், ஒருவரிடம் 1,000 ரிங்கிட் வரை பணம் கோரப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தலைவர் தெரிவித்தார். குற்றச்சாட்டுகள் உண்மை என உறுதியான ஆதாரங்கள் கிடைத்தால், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது எந்தவித சலுகையும் இன்றி கடுமையான ஒழுங்கு மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

