உண்மை செய்தியே பத்திரிகைத்துறையின் அடித்தளம் – தியோ நீ சிங்
- Surendran Sumdraraj
- 15 Jun, 2026
புத்ராஜெயா, ஜூன் 15 –
பத்திரிகைத்துறையின் எதிர்காலம் எந்த ஊடகம் அதிகளவில் வைரலாகும் செய்திகளை வெளியிடுகிறது என்பதன் அடிப்படையில் அல்ல, மாறாக உண்மைத்தன்மை மற்றும் துல்லியத்தை நிலைநிறுத்தும் திறனின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்று தகவல் தொடர்புத் துணை அமைச்சர் தியோ நீ சிங் வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில், பத்திரிகைத் துறையும் ஊடக நிறுவனங்களும் உண்மைத் தகவல்கள், நம்பகத்தன்மை மற்றும் துல்லியமான செய்தி வெளியீடு ஆகியவற்றையே தங்களின் முக்கிய அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.
மேலும், ஒரு ஊடக நிறுவனத்தின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் அதன் நற்பெயரும் ஒரே நாளில் உருவாகாது என்றும், அதை கட்டியெழுப்ப பல ஆண்டுகள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“மக்களின் கவனம் ஒரு கணத்தில் வரலாம், அதே வேகத்தில் மறைந்தும் போகலாம். ஆனால் நம்பிக்கை என்பது நிலையானது. தரமான பத்திரிகைத்துறையின் மிக முக்கியமான அடித்தளம் நம்பகத்தன்மைதான்,” என்று அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

