FAHMI சுய விளம்பரத்தைத் தவிர்த்தால் நல்லது - Khairy அறிவுரை!

top-news
FREE WEBSITE AD

தொடர்பு துறை அமைச்சர் fahmi fadzil தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் Khairy Jamaluddin அறிவுருத்தினார். அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளராக இருக்கும் அவர் அரசாங்கம் கொண்டுள்ள மக்கள் நலத்திட்டங்களை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்கும் பொறுப்பில் இருப்பதை உணர வேண்டும் என Khairy Jamaluddin தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் எனும் பொறுப்பு மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிய பொறுப்பு என்பதால், எதை எப்படி எப்போது சொல்ல வேண்டும் என்பதை நன்கு அறிந்து, முதிர்ச்சியுடன் செயல்பட வேண்டிய ஒருவர் அப்பொறுப்பில் இருக்க வேண்டும் என Khairy Jamaluddin  விளக்கமளித்தார். சமீபத்தில் முட்டை விலை தொடர்பாகப் பிரதமர் அன்வார் மிக பெரிய மக்கள் நலத்திட்டத்தை வெளியிடவிருப்பதாக fahmi fadzil தெரிவித்ததை அடுத்து மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது, ஆனால் மறுநாள் முட்டை விலை குறைப்பு மட்டுமே வெளியிடப்பட்டதும் பெரும்பாலான மக்கள் ஏமாற்றத்தையே உணர்ந்ததாக Khairy Jamaluddin தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *