பாஸ் பொதுக்கூட்டத்தில் அக்மால் சலே!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 3: பாஸ் இளைஞர் பிரிவின் வருடாந்திர முக்தமாருக்காக, அம்னோ  இளைஞர்  பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மல் சலே  கலந்துகொண்டார். அவருடன்  அம்னோ பிரிவைச் சேர்ந்த மேலும் 25 தலைவர்களும்  பங்கேற்றனர்.

பாஸ் கட்சியால் முக்தமாருக்கு அழைக்கப்பட்டிருந்த  அவர்களை  "தக்பீர்" முழக்கங்களுடன்  கட்சியினர் வரவேற்றனர்.

மெர்லிமாவ் சட்டமன்ற உறுப்பினரின் வருகையை அறிவித்த பாஸ் இளைஞர் தலைவர் அஃப்னான் ஹமிமி தாயிப் அஸாமுதீன், "நாம் அனைவரும் மாண்புமிகு அக்மலை வரவேற்போம்" என்று கூறினார்.

பெர்சாத்து கூட்டணியைத் தவிர, பெரிகாத்தான் நேஷனலின் மற்ற பிரிவுகளைச் சேர்ந்த இளைஞர் தலைவர்களும் இந்த முக்தமாரில் கலந்துகொண்டனர்.

சனிக்கிழமை வரை தொடரவிருக்கும் முக்தமாரில் கலந்துகொள்ள அம்னோ தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில், செப்டம்பர் 9 முதல் 12 வரை நடைபெறும் அம்னோவின்  மாநாட்டிற்கு பாஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *