பிகேஆர் தேசிய மாநாடு நாளை தொடக்கம்; 2,500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பு

top-news
FREE WEBSITE AD

ஆயர் கெரோ, ஆக. 13-

 2026ஆம் ஆண்டுக்கான பிகேஆர் தேசிய மாநாடு நாளை மலாக்கா சர்வதேச வர்த்தக மையத்தில் (MITC) தொடங்கவுள்ளது. இம்மாநாட்டில் 2,500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் சுமார் 3,000 பார்வையாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.

மாநாட்டின் தொடக்க நிகழ்வாக, பிகேஆர் கட்சியின் இளைஞர் பிரிவான அங்காத்தான் மூடா கெஅடிலான் (AMK) மற்றும் மகளிர் பிரிவின் மாநாடுகள் ஒரே நேரத்தில் தொடங்கப்படவுள்ளன. இவற்றை நூருல் இஸ்ஸா அன்வார் தொடங்கி வைக்கவுள்ளார்.

பிகேஆர் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வரும் சனிக்கிழமை நடைபெறும் தேசிய மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்து, கட்சியின் கொள்கை உரையை நிகழ்த்தவுள்ளார்.

இந்த மாநாட்டில் உள்நாட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதை உறுதி செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள், கட்சியின் கொள்கைகள் மற்றும் நாட்டின் தற்போதைய விவகாரங்கள் குறித்து மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *