பிகேஆர் தேசிய மாநாடு: போராட்ட உறுதியை புதுப்பித்து, கட்சிப் பணிகளை வலுப்படுத்தும் களமாக அமையும்
- Surendran Sumdraraj
- 17 Aug, 2026
கோலாலம்பூர், ஆக. 17-
2026ஆம் ஆண்டுக்கான பிகேஆர் தேசிய மாநாடு இன்று நிறைவடைந்த நிலையில், கட்சியின் போராட்ட உறுதியை மீண்டும் புதுப்பித்து, மக்களின் நலனுக்கான பணிகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய களமாக அமைந்ததாக பிகேஆர் தகவல் பிரிவு தலைவர் டத்தோஸ்ரீ பஹ்மி பட்சில் தெரிவித்தார்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாடு வெறுமனே உரையாற்றுவதற்கும் விவாதிப்பதற்குமான தளமாக மட்டும் அமையவில்லை என்று அவர் கூறினார்.
மாறாக, கட்சியின் செயல்பாடுகளை சுயமதிப்பீடு செய்தல், அடிமட்ட உறுப்பினர்களின் குரல்களைக் கேட்டறிதல், கட்சியின் பலம் மற்றும் பலவீனங்களை மதிப்பிடுதல், அத்துடன் எதிர்காலப் போராட்டத்திற்கான உறுதியை புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான வாய்ப்பாகவும் மாநாடு அமைந்ததாக பஹ்மி குறிப்பிட்டார்.
பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மாநாட்டு உரை, சீர்திருத்தத்திற்கான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதைத் தெளிவாக நினைவூட்டியதாக அவர் தெரிவித்தார்.
அதேவேளை, கட்சியின் வலிமையும் செயல்பாடுகளும் எப்போதும் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தியதாக பஹ்மி கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



