1BESTARINET RM 4பில்லியன் ஊழல் வழக்கில் முகைதீன்!

top-news
FREE WEBSITE AD

கடந்த 2011 ஆம் ஆண்டு நஜீப் தலைமையிலான அரசாங்கம் பள்ளிக்கூடங்களில் உள்ள வகுப்பறைகளின் தரத்தை மேம்படுத்தவும் மெய்நிகர் வகுப்பறைகளாக உருமாற்றவும் YTL Communications Sdn Bhd எனும் நிறுவனத்தின் மூலமாக 10,000 பள்ளிகளுக்கு RM4.47 பில்லியன் நிதி கல்வி அமைச்சின் மூலமாக வழங்கப்பட்டதில் முறைகேடு நிகழ்ந்திருப்பதை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் ஆதாரத்துடன் கண்டுப்பிடித்து விசாரணை நடத்தி வருகிறது. 1BESTARINET என பெயரிடப்பட்ட இத்திட்டத்தில் 2011 முதல் கல்வி அமைச்சர்களாக இருந்த அனைவரையும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான MACC விசாரிக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு கல்வி அமைச்சராக இருந்த Maszlee Malik 1BESTARINET திட்டத்தை நிறுத்தியதாகவும் அதுவரையில் 8000 பள்ளிகளில் வகுப்பறைகள் மேம்பாட்டுத் திட்டம் நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் Maszlee Malik க்கு முன்னர் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த Mahdzir Khalid மீது விசாரணை நடத்தப்படும் என தெரிய வந்துள்ளது. இதன் விசாரணை அறிக்கை இன்னும் முடிவடையாத நிலையில் மேலும் விசாரணைகள் நடத்தப்படும் என லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான MACC தெரிவித்தது. 

SPRM mempertimbangkan untuk memanggil bekas Menteri Pendidikan Mahdzir Khalid dan bekas Perdana Menteri Muhyiddin Yassin bagi membantu siasatan penyelewengan dana  dalam projek 1BestariNet yang melibatkan YTL Communications Sdn Bhd. Siasatan juga melibatkan bekas Menteri Pendidikan, Maszlee Malik.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *