ரஷ்யாவில் புகுந்து உக்ரைன் தாக்குதல்!
- Muthu Kumar
- 23 Dec, 2025
ரஷ்யாவில் புகுந்து உக்ரைன் நடத்திய தொடர் தாக்குதலில் ஒரு எண்ணெய் முனையம், ஒரு எண்ணெய் குழாய்வழித்தடம், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு போர் விமானங்கள், இரண்டு கப்பல்கள் தகர்க்கப்பட்டன.
இந்த திடீர் தாக்குதலில் தமன்னெப்டிகாஸ் எண்ணெய் முனையம், ஒரு வெடிமருந்து கிடங்கு, தெற்கு கிராஸ்னோடர் பிராந்தியத்தில் ஒரு குழாய்வழித்தடம், இரண்டு கப்பல்துறைமுகம், 2 கப்பல்கள் சேதமடைந்தன.
இதனால் பெரும் தீவிபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உள்ள ஒரு வெடிமருந்து கிடங்கு தகர்க்கப்பட்டது. மேலும் டிரோன்களுக்கான ரஷ்ய ஏவுதளமும் தாக்கப்பட்டது. மேற்கு ரஷ்யாவில் உள்ள லிபெட்ஸ்க் நகருக்கு அருகிலுள்ள ஒரு தளத்தில் 2 ரஷ்ய போர் விமானங்கள் தகர்க்கப்பட்டன. உக்ரைனில் இந்த திடீர் தாக்குதலால் ரஷ்யாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



