சீனப் பிரஜை தலைமையிலான திருட்டுக் கும்பல் முறியடிப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 12-

 சீனப் பிரஜையால் வழிநடத்தப்பட்டதாகக் கூறப்படும் வீடு உடைக்கும் கும்பல் ஒன்று, இங்குள்ள ஸ்ரீ பெட்டாலிங் மற்றும் பூடு பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இரு சோதனை நடவடிக்கைகளில் ஐந்து ஆடவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து முறியடிக்கப்பட்டதாக கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் கூறினார்.

செராஸ் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு (BSJD) மேற்கொண்ட இந்த நடவடிக்கை, கிடைத்த தகவல்கள் மற்றும் உளவுத் தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இந்தச் சோதனை நடவடிக்கையின்போது, வீடுகளில் கொள்ளையடிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு வாகனம் மற்றும் பல்வேறு உபகரணங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்ததாக ஃபாடில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் மேலதிக விசாரணைக்காக காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *