சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றிலேயே வெளியேறிய லக்சயா சென்
- Surendran Sumdraraj
- 02 Sep, 2026
ஷென்சென், செப். 2 –
சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றிலேயே இந்தியாவின் முன்னணி வீரர் லக்சயா சென் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில், 2021 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற லக்சயா சென், உலகத் தரவரிசையில் 9-ஆவது இடத்தில் உள்ள கனடாவின் விக்டர் லாயை எதிர்கொண்டார்.
38 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே தடுமாறிய லக்சயா சென், எதிரணி வீரரின் வேகமான ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் போனார். இறுதியில் அவர் 14-21, 7-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



