KL நில அமிழ்வு ஆய்வு எதிர்காலத்தில் அபாயப் பகுதிகளைக் கண்டறிய உதவும்- டாக்டர் ஜாலிஹா!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 14 :

கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஜலான் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் ஏற்பட்ட நில அமிழ்வுச் சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கை, முதலில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.
குறிப்பிட்ட அந்த அறிக்கை தற்போது பல்வேறு நிறுவனங்களின் இறுதி மதிப்பாய்வு கட்டத்தில் உள்ளது என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜாலான் மஸ்ஜித் இந்தியா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட  நில அமிழ்வுச் சம்பவம்  குறித்த முழு விசாரணையின் முடிவு, டாங் வாங்கி காவல்துறைத் தலைவர் மற்றும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகமான DBKL  ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்ட பல்வேறு நிறுவனங்களின் இறுதி மதிப்பாய்வில் உள்ளத என்று கூறினார்.

கோலாலம்பூரின் மத்திய வணிக மாவட்டம் உட்பட அபாயப் பகுதிகளின் புவியியல் மற்றும் துணை மேற்பரப்பு கட்டமைப்பை மதிப்பிடும் தொழில்நுட்ப அறிக்கையும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என்று ஜாலிஹா கூறினார்.இந்த ஆய்வு எதிர்காலத்தில் அபாயப் பகுதிகளைக் கண்டறிய உதவுகிறது என்று அவர் கூறினார்!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *