சட்டம்-ஒழுங்கு சீரழிந்து ரத்தச் சகதியில் தமிழ்நாடு: மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

top-news

சென்னை, அக். 7: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கடுமையாக சீரழிந்து, பொதுமக்கள் அச்சத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் பல பகுதிகளில் நிகழ்ந்த கொலைச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். சென்னை மயிலாப்பூரில் 19 வயது இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், திருத்தணியில் தனது மகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் மீது புகார் அளித்த தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம், சேலத்தில் மூதாட்டி கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்டவற்றை அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திண்டுக்கல், மதுரை, சோழவந்தான் உள்ளிட்ட இடங்களிலும் அடுத்தடுத்து கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், எண்ணூர் ரயில் நிலையத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் முயற்சி நடைபெற்றுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *