முதல்முறையாக ஆஸி. ஓபனை வென்றார் அல்காரஸ்!
- Muthu Kumar
- 01 Feb, 2026
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் 22 வயதே ஆன இளம் வீரர் கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.பரபரப்பாக நடந்த இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை 2-6, 6-2, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் அல்காரஸ் வீழ்த்தினார்.
ஸ்பெயின் வீரரான கார்லோஸ் அல்காரஸ் முதல்முறையாக ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று அசத்தினார். இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற அல்காரஸ் முதல்முறையாக ஆஸி. பட்டத்தை வென்றார்.
பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்க ஓபனில் தலா 2 கிராண்ட்ஸ்லாம் வென்ற அல்காரஸ் 7வது கிராண்ட்ஸ்லாம் வென்றார். முதல் செட்டை வென்றபோதும் 1-3 என்ற செட் கணக்கில் செர்பியாவின் ஜோகோவிச் போராடி தோல்வி அடைந்தார். 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்ல ஜோகோவிச் போராடிய நிலையில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டம் வென்ற பிறகு இதுவரை எந்த பட்டத்தையும் ஜோகோவிச் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



