‘பென்ஸ்’ படத்தில் ‘எல்சியு’ கதாபாத்திரங்கள் இடம்பெறும் - நிவின் பாலி

top-news

சென்னை, செப். 30 –

லோகேஷ் கனகராஜின் ‘லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்’ எனப்படும் ‘எல்சியு’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சினிமா பிரபஞ்சத்தின் அடுத்த படைப்பாக உருவாகி வரும் ‘பென்ஸ்’ திரைப்படத்தில் ‘எல்சியு’ தொடர்புடைய கதாபாத்திரங்கள் இடம்பெறும் என்று நடிகர் நிவின் பாலி தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய ‘எல்சியு’வில் ஏற்கனவே ‘கைதி’, ‘விக்ரம்’, ‘லியோ’ ஆகிய திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த படங்களில் இடம்பெற்ற டில்லி, ரோலக்ஸ் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே தனி வரவேற்பைப் பெற்றுள்ளன. அடுத்ததாக ‘கைதி 2’ மற்றும் ‘ரோலக்ஸ்’ உள்ளிட்ட படங்களும் இந்த பிரபஞ்சத்தில் உருவாக உள்ளன.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனம் தயாரிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். ரவி மோகன், மாதவன், சம்யுக்தா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நிவின் பாலி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *