மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்! TVK leader Vijay in an attempt to form a mega alliance
- Muthu Kumar
- 28 Jan, 2026
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் யாரும் எதிர்பார்க்காத வகையில் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒருபுறம் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்புடன் தவெக ரகசியப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வரும் நிலையில், மறுபுறம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை வளைக்கும் அதிரடி முயற்சியிலும் விஜய் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் சீமானுக்கு 100 தொகுதிகள் ஒதுக்கீடு, 6 அமைச்சர் பதவிகள் மற்றும் துணை முதலமைச்சர் பதவி ஆகிய அதிரடி சலுகைகளை விஜய் முன்மொழிந்துள்ளதாகத் தெரிகிறது. “நாம் இணைந்தால் ஆட்சி நமதே” என விஜய் விடுத்த அழைப்பிற்கு, சீமானும் “நேரில் பேசலாம்” எனப் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்தத் திடீர் அரசியல் நகர்வுகள் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக வட்டாரங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



