லீட்ஸ் அதிர்ச்சி வெற்றி: செல்சியை 3-1இல் வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

top-news

செய்தி - வெற்றி மைந்தன்

லண்டன், டிச. 4-

பிரீமியர் லீக் போட்டியில் செல்சி அணியின் சாம்பியன்ஷிப் கனவுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. எல்லண்ட் ரோடு மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லீட்ஸ் யுனைடெட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் செல்சியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் தொடர்ச்சியாக நான்கு தோல்விகளால் பின்னடைவை சந்தித்து வந்த லீட்ஸ், புள்ளிப்பட்டியலில் பதினேழாவது இடத்திற்கு முன்னேறியது.

மறுபுறம், கடந்த நான்கு லீக் போட்டிகளில் தோல்வியே அறியாத செல்சி (மூன்று வெற்றி, ஒரு டிரா) எதிர்பாராத இந்த தோல்வியால் பெரும் அதிர்ச்சி அடைந்தது. அர்சனலுடனான கடைசி ஆட்டத்தில் 1-1 என்று டிரா செய்த போது ஐந்து மாற்றங்களை செய்த பயிற்சியாளர் என்சோ மரேஸ்காவின் தந்திரம் இம்முறை பலன் தரவில்லை. ஆட்டம் தொடங்கியது முதலே செல்சி அணி சொதப்பலாக தெரிந்தது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *