இருவரைக் கொன்று தற்கொலைக்கு முயற்சித்த ஆடவன் கைது!

top-news

நவம்பர் 9,

குடியிருப்புப் பகுதியில் இருவரைக் கத்தியால் குத்தி, தன் கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயற்சிக்கும்படியானக் காணொலி பரவியதை அடுத்து, தாக்கிய ஆடவன் தற்போது உயிருடன் இருப்பதாகவும் பினாங்கு அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பினாங்கு மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Hamzah Ahmad தெரிவித்தார். 

முன்னதாக Bandar Baru Farlim பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் 62 வயது முதியவரையும் அவரின் 30 வயது மகளையும் கத்தியால் தாக்கிய 32 வயது ஆடவன் தனது கழுத்தில் வெட்டுக்காயத்துடன் மயங்கிய நிலையில் காணப்பட்ட நிலையில் அவர் இறந்ததாக வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை என்றும் தற்போது அவர் சுயநினைவுடன் இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் பினாங்கு மாநிலக் காவல்துறை இச்சம்பவத்தை முழுமையாக விசாரிக்கும் என்றும் Datuk Hamzah Ahmad உறுதியளித்தார்.

Seorang lelaki berusia 32 tahun ditahan selepas menikam seorang bapa dan anak perempuan di Bandar Baru Farlim, Air Itam. Mangsa, berusia 62 dan 30 tahun, maut. Suspek yang cedera kini stabil.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *