திரங்கானு அரச குடும்பத்தினரை அவமதித்தவருக்கு மூன்று மாத சிறை

top-news
FREE WEBSITE AD

சிப்பாங், ஆக. 14 —

திரங்கானு அரச குடும்பத்தினரை அவமதிக்கும் மற்றும் அச்சுறுத்தும் வகையில் சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பதிவுகளை வெளியிட்ட ஆடவருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அக்மத் புவாட் ஒத்மான், ஐந்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்ட அஸ்மான் ஹக்கீம் ஹசானுடின், 35, என்பவருக்கு இந்தத் தண்டனையை விதித்தார்.

வழக்கறிஞர் இல்லாமல் நீதிமன்றத்தில் அஸ்மான், தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998-இன் 233(1)(a) பிரிவின் கீழ் ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.

கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி, தனது எக்ஸ் கணக்கைப் பயன்படுத்தி மிகவும் ஆபாசமான, அவமதிக்கும் தன்மை கொண்டதுடன் அச்சுறுத்தல் அடங்கிய தகவல் தொடர்புகளை உருவாக்கி வெளியிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *