சிங்கப்பூருக்குப் போதைப்பொருள் கடத்த முயன்றதாக மலேசியர் கைது

top-news

சிங்கப்பூர், ஆக. 5-

சிங்கப்பூருக்குள் 8.6 கிலோகிராமுக்கும் அதிகமான கஞ்சா மற்றும் 1.5 கிலோகிராமுக்கும் அதிகமான மெத்தாம்பெட்டமைன் (ஷாபு) கடத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் 22 வயதுடைய மலேசிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றதாக சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் (ICA) திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வுட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிகாரிகள் அந்த இளைஞர் ஓட்டிச் சென்ற காரை மேலதிகச் சோதனைக்காக நிறுத்தினர். அப்போது, காரின் பின்புறப் பொருள் வைக்கும் பகுதியில் இருந்த பெட்டியில் சந்தேகத்திற்கிடமான இரண்டு போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு (CNB) அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் மேற்கொண்ட விரிவான சோதனையில், காரின் பின்புறத்தில் மேலும் பல போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *