கிணற்றில் மூழ்கி 64 வயது முதியவர் பலி!

top-news

நவம்பர் 17,

அதிகாலை தொழுகைக்குப் பின் வீட்டின் பின்னிருந்த கிணற்றில் தவறி விழுந்த 64 வயது முதியவர், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். கிளாந்தானில் உள்ள Kampung Tasek Bakong எனும் தோட்டத்தில் வாழ்ந்து வந்த அவர் கிணற்றில் விழுந்து அலறியதில் அண்டை வீட்டுக்காரர் மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகாலை 6.30 க்கு அவசர அழைப்பைப் பெற்றதும் சமபவ இடத்திற்கு விரைந்து முதியவரைக் காலை 6,52 மணிக்கு மீட்டதாகவும், அவர் கிணற்று நீரில் மூழ்கி அவர் உயிரிழந்ததாகவும் Rantau Panjang மாவட்ட மீட்புப் படை இயக்குநர் Shapawi Stapa தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் எந்தவொரு குற்றச் சம்பவங்களுக்கான ஆதாராங்கள் இல்லை என காவல் துறையினர் உறுதிப்படுத்திய நிலையில் அவர் தவறி விழுந்தது இறந்ததாகத் தெரிவித்தனர்.

Lelaki berusia 64 tahun di Kampung Tasek Bakong meninggal dunia selepas terjatuh ke dalam perigi. Jiran mangsa sempat mendengar panggilan minta tolong. Bomba mengeluarkan mangsa setelah menerima panggilan kecemasan sekitar jam 6.52 pagi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *