கன்டெய்னர் லாரி மோதி 68 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி – ஓட்டுநர் கைது

top-news

பட்டர்வொர்த், செப். 30-

 ஜாலான் பெருசாஹான் சுங்கை லோகான் 6 பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் 68 வயது முதிய மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்ததைத் தொடர்ந்து, கன்டெய்னர் லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் காலை சுமார் 11.30 மணியளவில் ஜாலான் பெருசாஹான் சுங்கை லோகான் 6 சந்திப்பில் கன்டெய்னர் லாரியும் மோட்டார் சைக்கிளும் சம்பந்தப்பட்ட இந்த விபத்து நிகழ்ந்தது.

விபத்தில் பலத்த காயமடைந்த 68 வயது ஆடவர் உடனடியாக சிகிச்சைக்காக செபராங் ஜெயா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செபராங் பிறை உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் அனுவார் அப்துல் ரஹ்மான் கூறுகையில், ஆரம்பகட்ட விசாரணையின்படி கன்டெய்னர் லாரி சந்திப்புக்குள் நுழைவதற்காக இடதுபுறமாக திரும்பியதாக நம்பப்படுகிறது.

அதே நேரத்தில் லாரிக்கு இணையாக மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர், லாரியைத் தவிர்க்க முடியாமல் அதன் முன்பகுதியில் மோதியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *