கூட்டாட்சி பிரதேச மன்னிப்பு வாரியம் நாளை கூடுகிறது – ஹன்னா இயோ உறுதி

top-news

கோலாலம்பூர், செப். 10 –

கூட்டாட்சி பிரதேச மன்னிப்பு வாரியம் நாளை, செப்டம்பர் 11-ஆம் தேதி கூட்டம் நடத்தவுள்ளதாகப் பிரதமர் துறை அமைச்சர் (கூட்டாட்சி பிரதேசம்) ஹன்னா இயோ உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டவர்களில் தாமும் ஒருவர் என்பதை அவர் உறுதிப்படுத்தினார். எனினும், கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ள விவகாரங்கள் அல்லது நிகழ்ச்சி நிரல் தொடர்பான மேலதிக தகவல்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

மன்னிப்பு வாரியத்தின் கூட்டம் நடைபெறவுள்ளதாக வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தொடர்பான புதிய மன்னிப்பு விண்ணப்பம் இந்த வாரக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படலாம் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இந்த விவகாரம் நாளைய கூட்டத்தின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *