நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவது அவர்களின் முழு உரிமை: ஷாஹிடான் காசிம்
- Surendran Sumdraraj
- 15 Aug, 2026
கங்கார், ஆக. 15 —
எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனது பதவியை ராஜினாமா செய்வது, நாட்டின் சட்டத்தால் பாதுகாக்கப்படும் தனிநபரின் முழுமையான உரிமை என ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிம் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒருவர் பதவி விலகும் முடிவை எடுத்தால், அதில் தலையிட முடியாது என்றும் அவர் கூறினார். குறிப்பாக, கட்சியின் தலைமைத்துவ பாணி உள்ளிட்ட சில விடயங்களில் அதிருப்தி ஏற்பட்டால், மக்கள் பிரதிநிதிகள் இத்தகைய முடிவை எடுக்க சுதந்திரம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“அவர்கள் சட்டத்தின் அடிப்படையில்தான் செயல்படுகிறார்கள். எனவே, அவர்கள் அவ்வாறு செய்யலாம். ஒருவேளை கட்சித் தலைமையின் மீது அவர்களுக்கு அதிருப்தி இருக்கலாம். அப்படியானால் என்ன செய்வது?” என்று ஷாஹிடான் கேள்வி எழுப்பினார்.
மேலும், கட்சியின் தலைமையுடன் அதிருப்தியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் பலர் இருக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



