சவுதி சூப்பர் கோப்பை தொடரில் கோப்பையை தட்டி சென்றது அல் ஹிலால் அணி!

top-news
FREE WEBSITE AD

நேற்று நடைபெற்ற சவுதி சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் ரொனால்டோவின் அல் நாசர் அணி அல் ஹிலால் அணியுடன்  மோதியது.

விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியின் 44வது நிமிடத்தில் ரொனால்டோ கோல் அடித்து  அல் நாசர் அணியை முன்னிலை பெற செய்தார். ஆனால் அதன்பின் அல் நாசர் அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

அதன் பின் அல் ஹிலால் அடுத்தடுத்து கோல்களை அடித்தது. முடிவில் அல் ஹிலால் 4-1 என்ற கோல் கணக்கில் ரொனால்டோவின் அல் நாசர் அணியை வீழ்த்தி கோப்பையை தட்டி சென்றது. அல் ஹிலால் தரப்பில் அலெக்ஸாண்டர் மித்ரோவிக் இரண்டு கோல்களும் செர்ஜி மிலின்கோவிக் மற்றும் மால்கம் தலா ஒரு கோல் அடித்து அணியை வெற்றி பெற காரணமாக விளங்கினர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *