இஸ்ரேலை நீக்குங்கள்! ஐ.நா பொதுச்சபைக்கு மலேசியா வரைவுத் தீர்மானம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவம்பர் 4: பாலஸ்தீனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் சட்டங்கள், விதிகள் மற்றும் முடிவுகளை மீறும் பட்சத்தில், அந்த அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இஸ்ரேலை நீக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UN) வரைவுத் தீர்மானத்தை மலேசியா தயாரித்துள்ளது.

இந்த வரைவு தீர்மானம் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும், விரைவில் ஐநா பொதுச் சபையில் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டதும், கல்வி, சுகாதார சிகிச்சை மற்றும் மனிதாபிமான உதவி போன்ற அடிப்படை சேவைகளை தொடர்ந்து வழங்குவதற்கு ஐக்கிய நாடுகளின் பாலஸ்தீன அகதிகளுக்கான UNRWA நிவாரண மற்றும் பணி முகமைக்கு சட்ட ரீதியிலான உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

75 ஆண்டுகளாக, பாலஸ்தீன மக்களுக்கு சர்வதேச உதவிகளை வழங்குவதில் UNRWA முக்கிய உயிர்நாடியாக இருந்து வருவதாகவும், மலேசியாவில் UNRWA இன் முக்கிய பங்கை முழுமையாக ஆதரிக்கிறது என்றும், உதவி, ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்ந்து அதிகரிக்கப்படும் என்றும் அன்வார் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *