விஜயின் பிறந்தநாள் பரிசாக "தி கோட்" படத்தின் கிளிம்ஸ் காணொளி!

top-news

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் இன்று தன்னுடைய 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இன்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்து செப்டம்பர் மாதம் வெளிவர இருக்கும் தி கோட் படத்தின் சிறு காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோன்று இன்று மாலை படத்தின் 2-ம் பாடல் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் தி கோட் படத்தில் நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

மேலும் விஜயின் பிறந்தநாள் பரிசாக வெளியாகியுள்ள சிறு காணொளி தற்போது ரசிகர்களை கவர்ந்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.



https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *