சாலா இல்லாமலும் லிவர்புல் அதிரடி! இன்டரை 1-0க்கு வீழ்த்தியது

top-news

இத்தாலி, டிச. 10-

முகமது சாலா பிரச்சினை நடந்துகொண்டிருக்கும் நேரத்திலும் லிவர்புல் தனது வலிமையை நிரூபித்தது. அவ்வணி இத்தாலியின் சான் சிரோ மைதானத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இன்டர் மிலானை 1-0 என வீழ்த்தியது.

ஆட்டத்தின் 88-ஆவது நிமிடத்தில் டொமினிக் சோபோஸ்லாய் அடித்த பெனால்டி கோலே லிவர்புலுக்கு வெற்றியைத் தேடித் தந்தது. எகிப்திய நட்சத்திரம் முகமது சாலா, கடந்த வார இறுதியில் பயிற்சியாளர் ஆர்னே ஸ்லாட்டை பகிரங்கமாக விமர்சித்ததால் இங்கிலாந்திலேயே விடப்பட்டார். சாலா இல்லாத போட்டியிலும் லிவர்புல் அபாரமாக விளையாடியது.

இந்த ஆட்டத்தில் பெனால்டி விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்டர் வீரர் அலெஸாண்ட்ரோ பாஸ்டோனி, லிவர்புலின் புளோரியன் விர்ட்ஸின் ஜெர்சியை இழுத்ததாக ஜெர்மன் நடுவர் பெலிக்ஸ் ஸ்வேயர் தீர்ப்பளித்தார். இன்டர் ரசிகர்களும் வீரர்களும் இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

போட்டி முடிந்ததும் சான் சிரோவில் இருந்த லிவர்புல் ரசிகர்கள் “ஆர்னே ஸ்லாட்” என்று உரக்கக் கோஷமிட்டனர். கடந்த சில தினங்களாக சலாஹ் பிரச்சினையால் தலைவலி அடைந்திருந்த ஸ்லாட்டுக்கு இது இனிய முடிவாக அமைந்தது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *