பக்காத்தானுடன் கூட்டணியா? அது ஒரு தந்திரமாக இருக்கலாம்! - தக்கியுதீன் ஹசான்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 10: மலாக்கா மாநிலத் தேர்தல் தொடர்பாக பெரிகாத்தான் நேஷனல் மற்றும் பாரிசான் நேஷனல்  நடத்தும் பேச்சுவார்த்தைகளில் பெர்சாத்து கட்சி பங்கேற்காது என PN பொதுச்செயலாளர் தக்கியுதீன் ஹசான் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கவில்லை, ஆனால் விரைவில் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

ஒவ்வொரு மாநிலமும் வித்தியாசமானது என்பதாலும், இடங்களின் பங்கீடும் வேறுபட்டது என்பதாலும், இந்தப் பேச்சுவார்த்தைகள் நெகிரி செம்பிலானில் நடப்பதைப் போல இருக்காது. உதாரணமாக, மாநில சட்டமன்றத்தில் எங்களுக்கு எந்த இடங்களும் இல்லை, ஆனால் மலாக்காவில் எங்களுக்கு நாடாளுமன்ற இடங்கள் உள்ளன என்று கூறினார்.

இந்தக் காரணிகள் அனைத்தும் எங்கள் பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படையாக அமையும். ரெம்பியா மாநிலத் தொகுதி உட்பட, 20 அல்லது 21 இடங்களைத் தக்கவைத்துக் கொள்ள அவர்கள் விரும்புகிறார்களா என்பது குறித்தும் விவாதிக்கப்படும். அந்த சட்டமன்ற உறுப்பினரும் பாஸ் கட்சியில் இணைந்துள்ளார்  என்று அவர் கூறினார்.

பெர்சாத்து தானாகவே பெரிக்காத்தான் நேஷனல் உறுப்பினர் தகுதியை இழந்துவிட்டது என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியதை அடுத்து, பெர்சாத்து மற்றும் பாஸ் கட்சிகளுக்கு இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்தது. இந்தக் குற்றச்சாட்டை பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் அஹ்மத் சம்சுரி மொக்தார் நிராகரித்தார்.

பக்காத்தான் ஹராப்பானும் மலாக்கா பாரிசானுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக வந்த செய்திகள் குறித்த கேள்விக்கு, ​​அதுபற்றி தன்னிடம் எந்தத் தகவலும் இல்லை என்று தக்கியுதீன் கூறினார்.

"என்னிடம் எந்தத் தகவலும் இல்லை, இந்தப் பிரச்சினை இன்னும் எழவில்லை. அது உண்மையா இல்லையா என்று எங்களுக்குத் தெரியாது; நீங்கள் அம்னோவிடம் தான் கேட்க வேண்டும் " என்று அவர் விளக்கமளித்தார்.

“அது உண்மை என்று அம்னோ கூறினால், அதை நாங்கள் பரிசீலிக்க வேண்டியிருக்கும். இது ஒரு அரசியல் தந்திரமாகவும் இருக்கலாம்" என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *