பெர்சாத்துவுடன் கூட்டணியா?! - அமிருதின் ஷாரி விளக்கம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 10: பெரிக்காத்தான் நேஷனல் அல்லது பெர்சாத்துவுடன் ஒத்துழைப்பதற்கான கதவை பக்கத்தான் ஹரப்பான் மூடவில்லை என்று  சிலாங்கூ மந்திரி பெசார் அமிருதின் ஷாரி கூறினார்.

இருப்பினும், எந்தவொரு முடிவும் அரசியல்  நிலைத்தன்மை மற்றும் மக்களின் நலன்கள் ஆகிய இரண்டு கொள்கைகளைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படும் என்றும், இந்த இரண்டு கொள்கைகளையும் வருங்கால கூட்டாளிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அரசியல் நிலைத்தன்மை மற்றும் மக்களின் நல்வாழ்வு ஆகியவை அடிப்படைக் கொள்கைகளாக இருக்கும் பட்சத்தில், பெர்சாத்து அல்லது பெரிக்காத்தான் நேஷனல் மட்டுமல்ல, எந்தவொரு கட்சியுடனும் ஒத்துழைப்பது பரிசீலிக்கப்படலாம், என்று அவர் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் தலைமை தாங்கும் சிலாங்கூர் பக்கத்தான் ஹராப்பான், பெர்சாத்துவுடன் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார். மேலும் எந்தவொரு விவாதங்களோ அல்லது முடிவுகளோ எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பது உள்ளிட்ட சில காரணிகளைக் கருத்தில் கொண்ட பிறகு, சாத்தியமான எந்தவொரு ஒத்துழைப்பு குறித்தும் மத்திய தலைமை பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை, தற்போது PAS உடன் தகராறில் ஈடுபட்டுள்ள பெர்சாத்துவுடன் இணைந்து செயல்படும் சாத்தியத்திற்கு சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *