பெர்சாத்துவுடன் கூட்டணியா? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை! - ஃபஹ்மி பாட்சில்
- Shan Siva
- 12 Aug, 2026
கோலாலம்பூர், ஆக 12: பெர்சாத்து கட்சியுடன் ஒத்துழைப்பது குறித்த சாத்தியக்கூறுகளைப் பற்றி பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பிகேஆர் தலைவர்கள் விவாதிக்கவில்லை என்று பக்காத்தான் ஹராப்பான் தகவல் தொடர்பு இயக்குனர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.
பாஸ் கட்சியுடன்
தகராறில் ஈடுபட்டுள்ள பெர்சாது கட்சியுடன் இணைந்து செயல்படும் சாத்தியக்கூறுகளுக்கு
சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் திறந்த மனதுடன் இருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை
செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற
ஒரு நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவருமான
ஃபஹ்மி, இந்த விவகாரம் பக்காத்தான்
ஹராப்பான் அல்லது பிகேஆர் கூட்டங்களில் விவாதிக்கப்படவில்லை என்று கூறினார்.
கடந்த திங்கட்கிழமை,
சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் தலைவரும்
பிகேஆர் உதவித் தலைவருமான அமிருதின் ஷாரி, அரசியல் நிலைத்தன்மையின் நலன் கருதி பெரிகாத்தான் நேஷனல் அல்லது பெர்சாத்துவுடனான
ஒத்துழைப்புக்கான கதவை பக்காத்தான் ஹராப்பான் மூடவில்லை என்று கூறினார்.
அந்த அறிக்கையைத்
தொடர்ந்து, டிஏபி துணைப்
பொதுச்செயலாளர் ராம்கர்பால் சிங், அத்தகைய ஒத்துழைப்பு
குறித்து பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மன்றத்தில் விவாதிக்கப்பட்டதா? அல்லது முடிவு செய்யப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



