பாஸ் கட்சியுடன் கூட்டணியா? வாய்ப்பே இல்லை! - அம்னோ உச்சமன்ற உறுப்பினர் திட்டவட்டம்
- Shan Siva
- 22 Jul, 2024
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 22: அடுத்த பொதுத் தேர்தலில் இணைந்து
பணியாற்றுவது குறித்து அம்னோ தலைவர்கள் பாஸ் கட்சியின் சகாக்களை பலமுறை சந்தித்துப் பேசியதாக பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மட் ஃபத்லி ஷாரி
கூறியதை அம்னோ தலைவர் ஒருவர் நிராகரித்துள்ளார்.
அம்னோ உச்சமன்ற உறுப்பினர்
ரஸ்லான் ரஃபி, ஃபத்லி
தவறான கதைகளை ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும் 16-வது பொதுத்தேர்தலில் கூட்டணிக்காக கட்சிகளுக்கு இடையே முறையான
பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெயரிடப்படாத
அம்னோ தலைவர்கள் பாஸ் தலைவர்களைச் சந்திப்பதாக ஃபத்லி கூறியிருப்பது அம்னோவில் உள்
மோதலை ஏற்படுத்தும் முயற்சியாகவும் இருக்கலாம் என்று ரஸ்லான் கூறினார்.
பாஸ் மற்றும்
பெர்சாத்து இடையே எப்போதும் மோசமடைந்து வரும் உறவைப் பற்றி ஃபத்லி அதிக அக்கறை
காட்ட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்/
பெர்சாத்து பற்றி
PAS அடிமட்ட உறுப்பினர்களிடமிருந்து புகார்கள்
வந்திருப்பதாகவும் ரஸ்லான் FMT ஊடகத்திற்கு வழங்கிய செய்தியில் தெரிவித்துள்ளார்.
மலாய்க்காரர்களை
வேண்டுமென்றே பிளவுபடுத்தும் அறிக்கைகளை ஃபத்லி வெளியிடக்கூடாது, என்று அவர் எச்சரித்தார்.
.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *