எம்ஏசிசி கண்காணிப்பின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்கள்-டான் ஸ்ரீ அஸாம் பாக்கி!
- Muthu Kumar
- 26 Oct, 2024
புத்ராஜெயா, அக். 26
நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் தற்போது, மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) கண்காணிப்பின் கீழ் உள்ளன.“சிறப்பு நுழைவாயில்" அல்லது அதிகாரத் தரப்பினரின் பரிசோதனைகளின்றி, அந்நிய நாட்டவர்களை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளை முடியடிப்பதற்காக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, எம்ஏசிசி தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.
எனினும், மிக அதிகமான சுற்றுப் பயணிகள் வரும் விமான நிலையமான கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (கேஎல்ஐஏ) மீதுதான் எம்ஏசிசி அதிக கவனம் செலுத்தும் என்று அவர் தெரிவித்தார்.“நாட்டிற்குள் நுழையக் கூடிய ஒரு நுழைவாயிலாக இருப்பதால், அனைத்து விமான நிலையங்களையும் நாங்கள் கண்காணித்து வருவோம்'
"இவற்றில் மிகப் பெரிய விமான நிலையமாக இருப்பது கேஎல்ஐஏதான். அதனால்தான், வெளிநாட்டவர்கள் நுழையும் மையமாக விளங்குவதால்தான் கேஎல்ஐஏ மீது நாங்கள் கூடுதல் கவனம் செலுத்துகிறோம்.'ஜொகூர் போன்று இதர விமான நிலையங்களும் நுழைவாயிலாக இருக்கக் கூடும்.ஆனால், இவற்றுக்கெல்லாம் பெரியது கேஎல்ஐஏதான். இதர நாடுகளில் குடிநுழைவுத்துறைகள் கண்காணிக்கப்படுகின்றன. நாங்களும் கண்காணிக்கின்றோம் என்று அஸாம் கூறினார்.
புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனைத் தெரிவித்தார்.கேஎல்ஐஏவில் 'சிறப்பு நுழைவாயில்' அமைத்து அந்நிய நாட்டவர்கள் முறையாக பரிசோதிக்கப்படாமல் நாட்டிற்குள் நுழையவிட்ட நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருந்த சந்தேகத்தின் பேரில், கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் பம்ப், ஓப்ஸ் பம்ஸ் 2.0 மற்றும் ஓப்ஸ் செட்டிங் நடவடிக்கைகளில் 50 குடிநுழைத்துறை அதிகாரிகள் உட்பட 60 பேரை எம்ஏசிசி இதற்கு முன்னர் கைது செய்திருந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *