இந்தியா முழுவதும் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்!

top-news

இந்தியா முழுவதும் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்குவங்க மாநிலத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 24 மணி நேர வேலை நிறுத்தத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டம் காரணமாக மருத்துவ சேவைகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர கால சேவைகள் மட்டுமே வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் நோயாளிகளுக்கு பாதிப்பு இன்றி மருத்துவர்கள் போராடுமாறு தமிழக மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது.




https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *