தேவதாஸாகக் களமிறங்கிய லோகேஷ்: பாக்ஸ் ஆபிஸில் தொடங்கிய வேட்டை

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஆக. 10-

இயக்குநராக ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த லோகேஷ் கனகராஜ், தற்போது கதாநாயகனாக களமிறங்கியுள்ள ‘டிசி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் கவனம் ஈர்த்து வருகிறது.

‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

‘டிசி’ படத்தில் லோகேஷ் கனகராஜ், தேவதாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாமிகா கபி, சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளதாகப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *