கிளந்தானில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள்: 65 அகழ்வுப் பொறிகள் பறிமுதல்
- Surendran Sumdraraj
- 11 Aug, 2026
கோத்தா பாரு, ஆக. 11-
கிளந்தான் மாநிலத்தில் கடந்த ஆண்டு முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில், அத்துமீறல் மற்றும் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடர்பாக 63 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டதுடன், 77 அமலாக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கிளந்தான் துணை மந்திரி பெசார் டத்தோ டாக்டர் முகமட் ஃபட்ஸ்லி ஹசான் தெரிவித்தார்.
திறக்கப்பட்ட விசாரணை அறிக்கைகள் மேலதிக நடவடிக்கைக்காக நிலம் மற்றும் சுரங்கத் துறை அலுவலகத்தின் (பிடிஜி) வழக்குத் தொடரும் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் தளவாட வசதிகளை முடக்குவதும், அவை தொடர்ந்து செயல்படுவதைத் தடுப்பதும் அமலாக்க நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகும் என அவர் தெரிவித்தார்.
அதன் ஒரு பகுதியாக, சம்பந்தப்பட்டவர்களுக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் 65 அகழ்வுப் பொறிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 15.8 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் அதிகமாகக் கண்டறியப்படும் பகுதிகளை மையப்படுத்தி அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முகமட் ஃபட்ஸ்லி கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



