வடகிழக்கு பருவ மழையால் ரவூப்பை தொடர்ந்த்து லிப்பிஸில் வெள்ளம்!

top-news
FREE WEBSITE AD

குவாந்தான், நவ. 12-

வடகிழக்கு பருவமழையினால் பகாங்கின் லிப்பிஸ் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வீடுகளில் வெள்ளம் ஏறியதன் காரணமாக அறுபத்திரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 219 பேர் இரண்டு தற்காலிக துயர்துடைப்பு மையங்களில் நேற்று தஞ்சமடைந்தனர்.

பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது மாவட்டம் லிப்பிஸ் ஆகும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முதல் மாவட்டமான ரவூப்பில் வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அம்மாவட்டத்தில் அறுபத்தேழு குடும்பங்களைச் சேர்ந்த 228 பேர் ஆறு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

லிப்பிஸிலும் ரவூப்பிலும் தொடர்ந்து கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள நிலைமை மேலும் மோசமடையலாம் என்று பகாங் மாநில குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *