லாரியை மோதிய கார்! ஓட்டுநர் பலி! – ஜொகூர்
- Sangeetha K Loganathan
- 22 Nov, 2024
நவம்பர் 22,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரில் வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானதாக Kluang மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார். பத்து பஹாட்டிலிருந்து குளுவாங் நோக்கி செல்லும் சாலையில் நேற்று நண்பகல் 1 மணியளவில் விபத்து தொடர்பாக அவசர அழைப்பைப் பெற்றதாக அவர் தெரிவித்தார். உயிரிழந்தவர் குளுவாங்கைச் சேர்ந்த 36 வயது Faizal Sa’adan என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பிரேதப்பரிசோதனைக்காக அவரின் உடல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் 32 வயது லாரி ஓட்டுநர் காயங்களின்றி தப்பியதாகவும் Bahrin Mohd Noh தெரிவித்தார்.
Seorang lelaki maut selepas kereta dipandunya hilang kawalan dan bertembung dengan lori di Jalan Batu Pahat-Mersing, Kluang. Mangsa meninggal di tempat kejadian, pemandu lori selamat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *