நெடுஞ்சாலையின் எதிர்பாதையில் நுழைந்த லாரி விபத்து!

top-news
FREE WEBSITE AD

கட்டுப்பாட்டை இழந்த லாரி நெடுஞ்சாலையின் தடுப்பு சுவரை மோதி எதிர்பாதைக்குள் நுழைந்து விபத்துக்குள்ளாகும்படியானக் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து சம்பவம் நிகழ்ந்த இடத்தில் சோதனையிட்ட  Nilai மாவட்டக் காவல் ஆணையர் Abdul Malik Hasim விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நண்பகல் 1 மணியளவில் மலாக்காவிலிருந்து கிள்ளானை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த செம்பனை எண்ணெய் TRELER லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னிருந்த வாகனத்தை மோதி, தடுப்புச் சுவரை மோதி நெடுஞ்சாலையின் எதிர்த்திசைக்குச் சென்று தீ பிடித்ததாகவும் இதில் 53 வயது லாரி ஓட்டுநர் உயிர் தப்பியதாகவும் விபத்தில் சிக்கிய 2 வாகனங்களில் இருந்தவர்களும் உயிர் தப்பியதாக அவர் விளக்கமளித்தார்.

ஒரு பெண் ஓட்டுநருக்குச் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டதால் அவர் சிரம்பான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக Nilai மாவட்டக் காவல் ஆணையர் Abdul Malik Hasim குறிப்பிட்டார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *