“I love you all, I just want to say goodbye" - தற்கொலைக்கு முன் படிவம் 1 மாணவி உருக்கம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர் குயென் செங் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த படிவம் 1 மாணவியின் கடைசி வார்த்தைகள் இவை, பள்ளியின் 8வது மாடியில் இருந்து குதிக்கும் முன் சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வெளியாகியிருப்பதாக நம்பப்படுகிறது.

அந்த வீடியோவில், முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசிய மாணவி, தனது நன்றியைத் தெரிவித்ததோடு, தனக்காக எப்போதும் உறுதுணையாக இருக்கும் தனது நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன் தினம்  மாலை 6 மணியளவில் பள்ளியின் 8 வது மாடியில் விழுந்த சம்பந்தப்பட்ட மாணவி, பலத்த காயம் அடைந்து இறந்துவிட்டதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து பள்ளி நிர்வாகம் தனது இணையதளத்தில் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டு மாணவியின் மரணத்தை உறுதி செய்துள்ளது. இந்த விஷயத்தால் பாதிக்கப்பட்ட மற்ற மாணவர்களுக்கு உளவியல் ஆதரவு மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆலோசனைகளை ஆலோசகர்கள் தொடர்ந்து வழங்குவார்கள் என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

PDRM இந்த விஷயத்தை திடீர் மரணம் என்று விசாரித்து வருகிறது.

மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சரிபார்க்கப்படாத செய்திகளை பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களை பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *