லயோலா முன்னாள் மாணவர்கள் தினம்: நடிகர் சூர்யா உட்பட 12 பேருக்கு விருது
- Surendran Sumdraraj
- 11 Aug, 2026
சென்னை, ஆக. 11-
லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில், பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 12 முன்னாள் மாணவர்களுக்கு 2026-ம் ஆண்டுக்கான சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், லயோலா முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் ஜி. விஸ்வநாதன் வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் துணைத்தலைவர் அந்தோணி ராபின்சன், சென்னை மாகாண ஜெசுட் தலைவர் பிரிட்டோ வின்சென்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில், ‘வழிகாட்டும் ஒளி விருது’ பென்ஜமின் செரியன் மற்றும் சி. ராஜ்குமாருக்கும், ‘வணிகத் தலைவர் விருது’ திலிப் ஆர். வெல்லோடி மற்றும் விஜய் சங்கருக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த சேவைக்கான விருதுகள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ். ஜெயக்குமார் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி கேத்தரின் சரண்யாவுக்கு வழங்கப்பட்டன. உலகளாவிய சிறப்பு விருதுகள் சால் பலூர் மற்றும் மொய்ன் பலூருக்கு வழங்கப்பட்டன.
மேலும், தொழில்முறை சிறப்பு விருது சுந்தர் மனோகரனுக்கும், விளையாட்டு சாதனையாளர் விருது முன்னாள் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜுக்கும் வழங்கப்பட்டது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் சூர்யாவுக்கு ‘படைப்பாற்றல் சிறப்பு விருது’ வழங்கி கவுரவிக்கப்பட்டார். சூர்யா லயோலா கல்லூரியில் வணிகவியல் படித்த முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



