குளுவாங், தாமான் டேசா குடியிருப்போர் கழக ஏற்பாட்டில் அனைத்து இனத்தவரும் கலந்துகொண்ட விளையாட்டு போட்டி!

top-news

குளுவாங், செப். 26-

கடந்த 21ஆம் தேதியன்று குளுவாங், தாமான் டேசா குடியிருப்போர் கழகம் ருக்குன் தெத்தாங்கா ஏற்பாட்டில் 67ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து இனத்தவரும் கலந்து கொள்ளும் வகையில் விளையாட்டுப் போட்டி தாமான் டேசா குடியிருப்போர் கழக மண்டபத்தில் நடைபெற்றது.

தாமான் டேசா, குடியிருப்போர் கழக தலைவர் ஹாஜி ஜமாலுடின் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டியில், சிறப்பு வருகையாளராக கலந்து கொண்ட குளுவாங் ஒற்றுமை துறை அதிகாரி அஸ்மி போஸ்கார் தமது சிறப்புரையில், பல இனங்கள் வாழும் இந்நாட்டில் நல்லிணக்கத்தின் அவசியத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

பல இன மக்களிடையே இருந்து வரும் நல்லிணக்கத்தை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும் என்று கூறினார். மேலும் விளையாட்டுப் போட்டியை சிறப்பாக ஏற்பாடு செய்த தாமான் டேசா குடியிருப்போர் கழகம் மற்றும் ருக்குன் தெத்தாங்கா நிர்வாக உறுப்பினர்களை பாராட்டிப் பேசினார்.வெற்றி பெற்ற அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பரிசுகளை அஸ்மி போஸ்கார் எடுத்து வழங்கினார் மேலும் அதிர்ஷ்ட குலுக்கும் இடம் பெற்றது.



https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *