குளுவாங் அம்னோ இளைஞரணித் தலைவர் சையத் ஹுசைன் சையத் அப்துல்லாவுக்கு குற்றப் பின்னணி இல்லை!

top-news
FREE WEBSITE AD


பெட்டாலிங் ஜெயா:

குளுவாங் அம்னோ இளைஞரணித் தலைவர் சையத் ஹுசைன் சையத் அப்துல்லாவுக்கு குற்றப் பின்னணி இல்லை என்பதை போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.மக்கோத்தா சட்டமன்ற  இடைத்தேர்தலில் பாரிசான் நேஷனல் (பிஎன்) வேட்பாளர் எந்தக் குற்றமும் செய்ததாக எந்தப் பதிவும் இல்லை என்று குளுவாங் காவல்துறை தலைவர் பஹ்ரின் நோ ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

குற்றவாளிகள் மற்றும் விரும்பத்தகாத நபர்கள் பதிவு சட்டம் 1969-ன் கீழ் வைக்கப்பட்டுள்ள பதிவுகளில் சையத் ஹுசைனின் பெயர் காணப்படவில்லை என்று அவர் கூறினார்.இதனை அடுத்து தவறான அறிக்கைகளை முதலில் சரிபார்க்காமல் ஊகிக்கவோ அல்லது எளிதில் நம்பவோ வேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வேண்டுமென்றே அறிக்கை வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஹ்ரின் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *